கீழ குட்டப்பட்டியில் 11 ஆம் ஆண்டு எல்கை பந்தயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ குட்டப்பட்டியில் நேற்று 11ஆம் ஆண்டு எல்கை பந்தயம் நடைபெற்றது. கீழ குட்டப்பட்டி, புதுப்பாளையம், எம்ஜிஆர் நகர், கோட்டைமேடு, எழுநூற்று மங்களம், மேலகுட்டப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெண்களுக்கான ஓட்டப்பந்தயம், இளைஞர்களுக்கான சைக்கிள் ரேஸ், பெரிய ஒத்தை மாடு, சிறிய ஒத்தை மாடு, இரட்டை மாடு, பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை பந்தயங்கள் எனப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாடுகள், குதிரைகள் பங்கேற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி