மாயனூர் அருகே டூவீலர் மீது கார்மோதி விபத்து இளைஞர் படுகாயம்

சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டி அருகே உள்ள கலங்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன் மகன் முத்துச்சாமி வயது 21. இவர் மார்ச் 14ஆம் தேதி காலை 10:15 மணியளவில், கரூர்- திருச்சி சாலையில் அவரது டூவீலர் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் மாயனூர் தனியார் ஹோட்டல் எதிரே சென்றபோது, அதே சாலையில் ஈரோடு மாவட்டம் மேற்கு திருப்பதி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் மகன் நாகராஜ் வயது 23 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், முத்துச்சாமி ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

 இதில் நிலைதடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் முத்துச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த முத்துச்சாமியின் தந்தை முத்துராமன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி