வீரராக்கியம் பிரிவு சாலையில் கார் மோதி இளைஞர் படுகாயம்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா புஞ்சை தோட்டக்குறிச்சியை சேர்ந்தவர் முருகேசன் மகன் சபரீசன் 20. இவர் தனது பைக்கில் நேற்று வீரராக்கியம் பிரிவு அருகே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சென்றபோது, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி தனபால் என்பவர் ஓட்டிய வந்த கார் மோதியதில் சபரீசன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று கோவை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் தாயார் பிரியா அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி