கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் (31) என்பவர், தனது மாமியார் வீடான காணியாளம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 21 ஆம் தேதி, வீட்டில் இருந்த அவரது மனைவி தனலட்சுமி மற்றும் ஒன்றரை வயது மகன் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாததால், முருகேசன் மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் மே 23 அன்று வழக்குப்பதிந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.