கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சி முனையனூர் சமத்துவபுரத்தில் வசிக்கும் இரு குடியிருப்பு வீடுகளுக்கு வீட்டு வரி ரசீது வழங்காததை கண்டித்து, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் வருவாய் துறையை கண்டித்து விசிக சார்பில் வரும் 13 ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் தலைமையில் விசிக பொறுப்பாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.