குளித்தலை அருகே சின்னதுரை என்பவர், தனது பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்து, வடவம்பாடி விஏஓ சிவக்குமாரை அணுகியுள்ளார். பெயர் மாற்றம் செய்ய விஏஓ சிவக்குமார் ₹10,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர மறுத்த சின்னதுரை, கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில், பவுடர் தடவிய ₹10,000 பணத்தை சின்னதுரை விஏஓ சிவக்குமாரிடம் லஞ்சமாக கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.