கரூர்: பெண்கள் மீது டூவீலர் மோதி விபத்து..

கரூர் மாவட்டம், திம்மாச்சிபுரம், குடி தெருவை சேர்ந்தவர் விஜயா (வயது 58). இவர்களது உறவினரான ராஜ்குமார் மகள் காவ்யா (வயது 22). இருவரும் பிப்ரவரி 11ஆம் தேதி இரவு 8:30 மணி அளவில் திம்மாச்சிபுரம் பஸ் ஸ்டாப் அருகே சாலையை நடந்து கடக்க முயன்றுள்ளனர். அப்போது, திருச்சி மாவட்டம், உறையூர், நாச்சியார் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த் (வயது 22) என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர், நடந்து சென்ற விஜயா மற்றும் காவ்யா மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

இதில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக விஜயா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரசாந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி