கரூர்: அரசு பேருந்து மீது டூ-வீலர் மோதி விபத்து

புலியூர் முடக்கு சாலையில் அரசு பேருந்து மீது டூ வீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், பாகனத்தம், வெடிக்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (51). இவர் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் மார்ச் 30ஆம் தேதி அதிகாலை 5:45 மணி அளவில் கரூர்-திருச்சி சாலையில் அரசு பேருந்து ஓட்டிச் சென்றார். பேருந்து புலியூர் முடக்கு சாலை அருகே வந்தபோது எதிர் திசையில், புலியூர் அருகே காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலக்குமார் (51) என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் பாலகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த பசுபதிபாளையம்  காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாலகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி