கரூர்: மாட்டுசந்தையில் பிரச்சனை.. தள்ளுமுள்ளு; பரபரப்பு வீடியோ

உப்பிடமங்கலம் மாட்டுச் சந்தையில் சுங்கம் வசூலிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் தள்ளுமுள்ளு, பரபரப்பு. 

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தையில் கோவை, பொள்ளாச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து மாடுகளை வாங்க பெருமளவு வியாபாரிகள் வருகின்றனர். இந்த மாட்டுச்சந்தையில் சிந்து, ஜெர்சி, நாட்டு மாடு போன்ற பல்வேறு வகையான கறவை மாடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த மாட்டுச்சந்தையில் சுங்கம் அதிகம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு தெரிவித்து வியாபாரிகள் சந்தை வாசலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவடையும் நேரத்தில் அங்கு வந்த போலீசார் விவசாயிகளையும், வியாபாரிகளையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாட்டுச் சந்தையில் அதிக சுங்கம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த சம்பவம் போலீசார் வியாபாரிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி