அதில் தோகைமலை ஒன்றியத்தில் குடிநீர், காவிரி கூட்டு குடிநீர், தெருவிளக்கு, தூய்மை பணிகள் முறையாக செய்ய வேண்டியும், தோகைமலை சமுதாயக் கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுதல் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டி அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இந்நிகழ்வில் தோகைமலை மேற்கு ஒன்றிய தோழர்கள் பிரபு குமார், மலைவேல், சரத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.