சிவகங்கை மாவட்டம் சிறுகுடல் பட்டி அடுத்த கலங்கரைப் பட்டியை சேர்ந்தவர் முத்துராமன் மகன் முத்துசாமி (21). இவர் கடந்த 14ஆம் தேதி தனது பைக்கில் மாயனூர் சாலையில் சூர்யா ஹோட்டல் அருகே சென்றுள்ளார். அப்போது எதிரே ஈரோட்டை சேர்ந்த நாகராஜ் ஓட்டி வந்த கார் அதிவேகமாக பைக் பின்னால் மோதியதில் முத்துசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். முத்துசாமி தந்தை முத்துராமன் புகாரின் பேரில் மாயனூர் போலீசார் நேற்று (மார்ச் 16) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.