கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா செம்பியன் நத்தம் கிராமம் மாவத்தூரில் அருக்காணி பெயரில் உள்ள நிலத்தினை திருச்சி மாவட்டம் வடக்கு தாராநல்லூரைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மனைவி மீனாட்சி பெயரில் இருந்ததாகவும், கடந்த 2017 அன்று மீனாட்சி இறந்து விட்டதாக இறப்புச் சான்றும், மீனாட்சி என்பவருக்கு போலியான வாரிசு சான்றும் பெற்று தான் செட்டில்மெண்ட் பத்திரம் ஏற்படுத்தி உள்ளனர். இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் படி கடவூர் வட்டாட்சியர் இளம்பரிதி புகாரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வேலுச்சாமி, தீபா, சுகன்யா ஆகிய 3 பேர் மீது நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.