கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிபட்டியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, இன்று குளித்தலை காவிரி நதிக்கரையில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். குளித்தலை, அய்யர்மலை வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்த பக்தர்கள், அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழர் தேசம் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சதீஷ் மற்றும் இளைஞர் அணியினர் இதில் பங்கேற்றனர்.