கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா பாலவிடுதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலவிடுதி, கடவூர், அய்யம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். அதனை எடுத்து லாட்டரி சீட்டு விற்ற கருப்பசாமி, சரவணன், ஆறுமுகம், சக்திவேல், பாலசுப்ரமணியம், ஆண்டிவேல் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 93 லாட்டரி சீட்டுகள், ரூ. 2175 பறிமுதல் செய்தனர்.