கரூர்: விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய செந்தில் பாலாஜி

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி முன்னாள் முதல்வர் கலைஞரின் 102வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று திருச்சியிலிருந்து மாயனூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். 

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் அருகே முன்னால் சென்ற வாகனம் திடீரென பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்ததால், பின்னால் வந்த லாரியும், எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த செந்தில் பாலாஜி காரிலிருந்து இறங்கி அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினருடன் இணைந்து காருக்குள் சிக்கி இருந்தவரை மீட்டு தனது உதவியாளரின் காரில் ஏற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக லாலாபேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி