கரூர்: ஆற்று மணல் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா புணவாசிப்பட்டி சாலையில் லாலாபேட்டை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே அரசு அனுமதியின்றி காவிரி மணலை டிப்பர் லாரியில் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுதாகரன் 28 மற்றும் லாரி உரிமையாளர் கட்டளை பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகிய 2 பேர் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து ஓட்டுனர் சுதாகரனை கைது செய்தனர். மேலும் 3 யூனிட் ஆற்று மணலுடன் டிப்பர் லாரி பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி