கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக பேரூர் செயலாளர் சசிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் மகாமுனி கண்டன உரையாற்றினார். விசிக கிருஷ்ணராயபுரம் பேரூர் பொறுப்பாளர் உதயநிதி, முரளி, ரம்யா, பிரசாந்த், பேரூராட்சி தலைவர் சேதுமணி, அம்பிகாவதி, கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.