பஞ்சப்பட்டி மின் அலுவலகத்திற்கு உட்பட்ட 11 KV வடவம்பாடி மின் பாதையில் நாளை திங்கள்கிழமை (10 ஆம் தேதி) சிறப்பு பராமரிப்பு மற்றும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. இதனால், மேல பஞ்சப்பட்டி, சுக்காம்பட்டி, பூலாம்பட்டி, கண்ணமுத்தாம்பட்டி, கரட்டுப்பட்டி, பாப்பயம்பாடி, கோணிச்சிப்பட்டி, S. முத்தம்பட்டி, மல்லனூர், வடவம்பாடி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும். மற்ற மின் பாதைகளில் வழக்கம் போல் மின் விநியோகம் வழங்கப்படும் என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.