கரூர் ஜெகதாபியைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் நேற்று ஆணைகவுண்டம்பட்டி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வையாபுரி என்பவருடன் சென்றபோது, அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். மணிகண்டன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தந்தை ராமசாமியின் புகாரின் பேரில், சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.