கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்கின்ற பாலன் (21), செவ்வாய்க்கிழமை இரவு நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் காயமடைந்து, வீடு திரும்பியதும் மயங்கி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சண்முகத்தின் நண்பர்களான விக்னேஸ்வரன் (25), லிவீஸ் (21), சுஜய் (18), விக்ரம் (21), சஞ்சய் (20) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அன்பரசன் மற்றும் சசிகுமார் ஆகிய இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.