கரூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்; தாயார் புகார்

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா முள்ளிப்பாடி கிராமம் வீர கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் செல்வராணி (35). பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 15 வருடங்களாக தனது ஊரில் உள்ள தெருக்களில் சுற்றி திரிந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி குளித்தலை நீதிமன்றத்திற்கு இடம் சம்பந்தமாக வழக்கு விசாரணைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டில் பார்த்தபோது செல்வராணி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் செல்வராணியின் தாயார் பெரியம்மாள் புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் நேற்று (மார்ச் 16) வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி