கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா குருணிகுளத்துப்பட்டி அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (45). இவர் கடந்த 17ஆம் தேதி தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் குருணிகுளத்துப்பட்டி வைரன் ஹோட்டல் அருகே சாலையில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் சகோதரர் வெள்ளைச்சாமி புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்