கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மணத்தட்டை கடைவீதி பகுதியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி குணசீலன் (48), கடந்த 6 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, கால் தவறி சாக்கடையில் விழுந்து படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்ட அவரை, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.