கடவூரில் புகை பிடித்த போது தீப்பிடித்து உயிரிழந்த சம்பவம்

கரூர் மாவட்டம் கடவூர் இடையபட்டியைச் சேர்ந்த அம்மையப்பன் (55) என்பவர், கடந்த 6 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் படுத்திருந்தபோது புகைப்பிடித்தபோது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்துள்ளது. இதில் காயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். அவரது உறவினர் பூவரசன் அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி