கரூர்: மது விற்ற நபர் கைது; ஸ்கூட்டியை பறிமுதல் செய்த போலீசார்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டுதிருக்காம் புலியூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்கிற கண்ணன் (60). இவர் அப்பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் அருகே ஸ்கூட்டரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற மாயனூர் போலீசார் மது விற்ற கண்ணன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 29 மது பாட்டில்கள், ஒரு ஸ்கூட்டர் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி