பாலவிடுதியில் லாட்டரி விற்றவர் கைது.. 5598 சீட்டுகள் பறிமுதல்

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பாலவிடுதி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் லாட்டரி சீட்டு விற்ற திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஞானவேல் 28 என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு ஹோண்டா சைன் பைக், லாட்டரி விற்ற ரொக்க பணம் ரூபாய் 60,490 மற்றும் ரூ. 4,84,650 மதிப்புள்ள 5598 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி