கரூர் மாவட்டம் பாலவிடுதி ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அலுவலகம் இன்று திறப்பு விழா கண்டது. கடவூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.