கிருஷ்ணராயபுரத்தில் சமையல் பெண் ஊழியர் படுகாயம்

கரூர் மாவட்டம், பொய்கைபுதூரைச் சேர்ந்த முருகவேணி (42), சித்தலவாய் நடுநிலைப் பள்ளியில் சமையல் ஊழியராகப் பணிபுரிகிறார். நேற்று, தனது கணவர் விஸ்வநாதனுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, திம்மாச்சிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென பிரேக் பிடித்ததில் முருகவேணி கீழே விழுந்து இடது காலில் பலத்த காயமடைந்தார். அவர் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி