மாயனூரில் தனியார் பேருந்து மோதி முதியவர் படுகாயம்

கரூர் கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 70 வயதான செல்லப்பன், நேற்று முன்தினம் தனியார் பேருந்தில் நின்று கொண்டு பயணித்துள்ளார். அப்போது ஓட்டுநர் பெருமாள்ராஜ் மனவாசி அருகே திடீரென பிரேக் பிடித்ததில் பேருந்துக்குள் கீழே விழுந்து, தலை, கை, காலில் காயம் அடைந்தார். அவர் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி