திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன், தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று கருப்பத்தூர், வயலூர், வீரியப்பாளையம் உள்ளிட்ட 22 கிராமங்களுக்குச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். கிராம மக்கள் வேட்பாளருக்கு ரோஜா இதழ்களைத் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.