கரூர் மாவட்டம், குளித்தலை அருகே எழுநூற்றுமங்களத்தைச் சேர்ந்த பாலமுருகன் (56) என்பவர் கே. பேட்டை சாலையில் பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில், நடந்து சென்ற சக்திவேல் மீதும் வாகனம் மோதி நிற்காமல் சென்றுவிட்டது. சக்திவேல் தலையில் பலத்த காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் சிவாஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.