கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் 38. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள கடைவீதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக நின்று கொண்டு அவ்வழியாக வரும் பொது மக்களிடம் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டிருந்தார். போலீசார் எச்சரித்தும் கேட்காததால் மோகன்ராஜ் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.