கடன் கொடுக்க தாமதமானதால் பைனான்ஸ் கம்பெனி சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலைக்கு விற்றுவிட்டது. கடந்த வருடம் நவம்பர் 9 ஆம் தேதி ஏழுமலை, அவரது மனைவி ஜெயலலிதா ஆகிய இருவரும் மாணிக்கத்திடம் எங்கள் இடத்திற்கு எப்படி வரலாம் என கேட்டு திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் சிஐஎஸ் நகல் பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். அதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ஏழுமலை, ஜெயலலிதா ஆகிய 2 பேர் மீது பாலவிடுதி போலீசார் இன்று (மார்ச் 13) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.