கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராகுல் காந்தி 33. இவர் கடந்த 13 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள பேக்கரி அருகே டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முனியப்பன், கருப்புசாமி, பாரதி ஆகிய மூன்று பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். ராகுல் காந்தி புகாரில் மூன்று பேர் மீது சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.