கரூர்: பேருந்து மோதி பைக்கில் சென்றவர் படுகாயம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மனவாசி பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி 45. இவர் நேற்று தனது பைக்கில் லாலாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றுள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து மோதியதில் மலைச்சாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மலைச்சாமி மகன் ராகுல் அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி