பாலவிடுதி: சட்டவிரோத லாட்டரி விற்பனை.. 6 பேர் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கரூர் மாவட்டம், பாலவிடுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காத்தமுத்து, பெண் காவல் உதவி ஆய்வாளர் செல்வி ஆகியோர் டிசம்பர் 31ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் பாலவிடுதி சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிழக்கு அய்யம்பாளையம், காளியம்மன் கோவில், கருணை ராகவா பேக்கரி, கடவூர் பஜார், கடவூர் சிவன் கோவில், பாலவிடுதி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. 

இந்த விற்பனையில் ஈடுபட்ட அய்யம்பாளையம் காலனியைச் சேர்ந்த ஆண்டிவேல், கடவூர் நடுத்தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம், ஆறுமுகம், சக்திவேல், சரவணன், மற்றும் பாலவிடுதியைச் சேர்ந்த கருப்பசாமி ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 2,395 மதிப்புள்ள 88 கள்ள லாட்டரி டிக்கெட்டுகளும், விற்பனை செய்து கையில் வைத்திருந்த ரூபாய் 2,375யும் பறிமுதல் செய்தனர். மேலும், ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி