கரூர்: டூவீலரில் சென்றவர் மீது வாகனம் மோதி விபத்து

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, வலையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் மகன் முரளிதரன் வயது (30). இவர் ஜனவரி 1ஆம் தேதி இரவு 8:30 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். 

இவரது வாகனம் உப்பிடமங்கலம் சர்வீஸ் சாலை அருகே சென்றபோது, அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், முரளிதரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த முரளிதரனுக்கு தலை, மார்பு, வலது தோள்பட்டை, வலது கால், வலது கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மாருதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இச்சம்பவம் அறிந்த முரளிதரனின் தந்தை மதியழகன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தின் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி