அப்போது திம்மாச்சிபுரம் பகுதிக்கு வந்தபோது, திருச்சி மாவட்டம், துறையூர், சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் ஓட்டிவந்த ட்ராவலர் வேன் நடந்து சென்ற ராமன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் அறிந்த ராமனின் மனைவி பானுமதி (60) என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட லாலாபேட்டை காவல்துறையினர், இது தொடர்பாக வேனை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஹரிகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.