இவரது வாகனம் செல்லாண்டிபாளையம், தட்டாங்காடு அருகே சென்றபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் அறிந்த சுப்பிரமணியின் மனைவி மாலதி (27) என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட தாந்தோணி மலை காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.