லாலாபேட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை கொடிக்கால் தெருவில் நரிமேடு அருகே ஒற்றை பனமரத்தின் அடியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (28), பாஸ்கர் (26), செல்வகுமார் (23), சிவா (25), தீபன் குமார் (21) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் (ஜூலை 4) கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 சீட்டு கட்டுகள், ரூ. 200 ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி