கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா லாலாபேட்டை தெற்கு கள்ளப்பள்ளி குப்பை கிடங்கு பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் 45, செந்தில்குமார் 38, செந்தில்நாதன் 48, சசிகுமார் 34 ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று (ஜூன் 14) கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மூன்று சீட்டு கட்டுகள், ரூபாய் 200 பறிமுதல் செய்தனர்.