சமத்துவபுரம்: முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

சமத்துவபுரம் அருகே முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது.கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மண்மங்கலம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் மார்ச் 14ஆம் தேதி மாலை 5: 30 மணி அளவில் சமத்துவபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது அப்பகுதியில் உள்ள முள் தோட்டப் பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், மணிகண்டன், புது காளியம்மன் தெருவை சேர்ந்த குமார், பால்வார்பட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 150-ஐ பறிமுதல் செய்தனர்.மேலும் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி