கரூர்: ஸ்டிக்கர் ஒட்ட வந்த பாஜகவினர் 27 பேர் கைது

தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி தமிழக பாஜகவினர் டாஸ்மாக் கடைகளில் தமிழ்நாடு முதல்வரின் படத்தினை ஓட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே தாளியாம்பட்டி டாஸ்மாக் கடையினை கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் தமிழக பாஜக மகளிர் அணி மாநில துணைத் தலைவர் மீனா வினோத்குமார் தலைமையில் 25க்கும் மேற்பட்ட பாஜகவினர் டாஸ்மாக் கடையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், அமைச்சரான செந்தில் பாலாஜியை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை முழக்கமிட்டவாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை ஓட்ட வந்தனர். அவர்களை லாலாபேட்டை காவல்துறையினர் டாஸ்மாக் கடை முன்பு தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி