கரூர் வையம்பட்டி சாலையில் கார் மீது பைக் மோதி 2 பேர் படுகாயம்

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சின்னாம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் 26. இவர் தனது பைக்கில் அமுதா என்பவரை அமர வைத்துக் கொண்டு வையம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேட்டுக்கடை தண்ணீர் டேங்க் அருகே சென்றபோது முன்னால் சென்ற கார் திடீரென எந்த ஒரு சைகையும் காட்டாமல் திரும்பியபோது பைக் மோதி இருவரும் காயமடைந்தனர். மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சதீஷ் புகாரில் பாலவிடுதி போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி