அந்த தண்ணீரானது கடந்த 30ம் தேதி அதிகாலை மாயனூர் கதவணையை வந்தடைந்தது. நேற்று காலை 16288 கன அடி தண்ணீர் வந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 1, 28, 000 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அந்த தண்ணீரில் 1, 26, 686 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், தென்கறை வாய்க்காலில் 500 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடியும் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.