தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டார். அதன் ஒரு பகுதியாக கரூர் வாங்காபாளையம் பகுதியில் தண்ணீர் பந்தலை தமிழக வெற்றிக் கழகம் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் இன்று (மார்ச் 26) திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள், நீர் மோர், தண்ணீர் ஆகியவற்றை வழங்கினார். மேலும் அவ்வழியாக சென்ற பேருந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்கினார்.