கரூர்: தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை மலரை வெளியிட்ட செந்தில் பாலாஜி

தமிழக அரசின் நான்காண்டு சாதனை மலரை வெளியிட்ட செந்தில் பாலாஜி. கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக "நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு" சாதனை மலர் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை மலரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டு சிறப்பு செய்தார்.

தொடர்புடைய செய்தி