மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பொதுமக்கள். கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட வருவாய் அலுவலரையும் நேரில் சந்தித்து மனுக்களை வழங்கினர். மனுக்களை வாங்கி பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து மனுதாரர் கொடுத்த மனுவின் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மனுதாரர்களை அழைத்து அவர்கள் மனு தொடர்பான விபரங்களை கேட்டு பதிவு செய்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் மாவட்ட ஆட்சியருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.