கரூர் மாவட்டம் வெள்ளியணை தெற்கு கிராமத்தில் தனியார் நிறுவனம் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைத்து வருகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் வண்டிப்பாதை வழியாக மின்கம்பம் நட்டு மின்சாரம் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில், ஆட்சியரை சந்தித்து மனு அளித்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.