இந்த தண்ணீர் ஆனது கடைமடை பகுதியான டெல்டா பகுதிக்கு வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும்.டெல்டா மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள கரூர் மாவட்டத்தில் தண்ணீர் வரும்போது கடைமடை வரை விவசாயத்திற்கு தடங்கல் இன்றி செல்வதற்காக பாப்புலர் முதலியார் வாய்க்கால் நேற்று தூர்வாரும் பணி கரூர் அடுத்த கடம்பங்குறிச்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் துவக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தூர்வாரும் பணியை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீர்வளத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.